தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என்று உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் ஊதிய உயர்வை நிறுத்தி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடந்த நிலையில், TET தேர்வில் தேர்ச்சி பெறுமாறு அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை. TET தேர்வை நடத்துவது தொடர்பாக அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories