மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளியில் வைத்து பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், அதிகாரிகள், மாணவ- மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் தங்களது வாழ்க்கையின் மூன்று முக்கிய கட்டங்களாக பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரி படிக்கும்போது அடுத்து என்ன செய்வது என்ற குழப்பம் ஏற்படும்.
இதற்காக தான் நமது அரசு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்நிலையில் மாணவர்கள் +2 படித்து முடித்தவுடன் படிப்பை நிறுத்தி விடாமல் மேற்படிப்பு கட்டாயமாக படிக்கவேண்டும். மேலும் அதனை முடித்தவுடன் கூடுதல் திறமையை வளர்த்துக்கொள்ள கணினி பயன்பாடு தொடர்பான பயிற்சியை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி முடித்த அனைவருக்கும் நமது நாட்டில் வேலை கிடைப்பதில்லை. எனவே மாணவர்கள் மிக தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் படித்தால் மட்டுமே தங்களது இலக்கை அடைய முடியும் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.