சிறந்த காவல்நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டு காவலர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காவல்நிலையம் சுகாதாரம் மற்றும் குற்ற வழக்குகளை பராமரிப்பதில் சிறந்து விளங்குகின்றது. இந்நிலையில் கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி கூடலூர் காவல்நிலையத்தை ஆய்வு செய்தார். இவர் காவல்நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். அதன்பிறகு போக்சோ சட்டங்களை திறமையாக கையாண்டு குற்றவாளிகளுக்கு மகளிர் காவலர்கள் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளனர். இதனால் இன்ஸ்பெக்டர் சசிகலா, சரோஜா, ராணி ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.
இதனையடுத்து காவலர்களின் குறைகளை டி.ஐ.ஜி கேட்டறிந்தார். அதன்பிறகு டிஐஜி முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் சுகாதாரம் மற்றும் குற்ற வழக்குகள் பராமரிப்பதில் கூடலூர் காவல்நிலையம் சிறந்து விளங்குகிறது. நீலகிரி மாவட்டத்தில் போக்சோ வழக்குகள் குறைவாகவும், ஈரோட்டில் வழக்குகள் அதிகமாகவும் காணப்படுகிறது. தமிழக எல்லைக்குள் மாவோயிஸ்டுகள் வந்ததாக தகவல்கள் வெளியானது. ஆனால் அந்த தகவலில் உண்மை இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் மாநில எல்லைகளில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.