மதுரை விமானம் நிலையத்தில் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது “சொத்துவரி அதிகரிப்பை கண்டித்து வரும் 11ஆம் தேதி அனைத்து மாநகராட்சிகளிலும் தேமுதிக சார்பில் போராட்டம் நடைபெற இருக்கிறது. 25 முதல் 50% வரை அதிகரிக்கலாம், ஆனால் 150% என்பது ஒட்டுமொத்த மக்களுக்கும் தாங்க முடியாத சுமை ஆகும். முன்பே பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. மேலும் விலைவாசி அதிகரிப்பை கண்டிப்பாக அரசு மறுபரிசீலனை செய்து திரும்பபெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது. அத்துடன் சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினையை உணராமல் அரசாங்கம் மக்களின் வரியில் அரசாங்கத்தை நடத்த முயற்சி செய்க்கின்றனர். ஆகவே விலைவாசி உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று அவர் கூறினார்.