உக்ரைன் மீது ரஷ்யா வீரர்களின் படையெடுப்பைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரும் அகதிகள் பிரச்சனையை மேற்கொண்டுள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் தங்களுடைய சொந்த நாட்டை விட்டு விட்டு அகதிகளாக பிற நாடுகளுக்கு குடியேறும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அண்டை நாடுகளும் தங்களுடைய முழு ஆதரவை அளித்து வருகிறது.
அந்த வரிசையில் கனடாவைச் சேர்ந்த வான்கூவர் தீவில் வசிக்கும் Brian மற்றும் Sharon Holowaychuk தம்பதி உக்ரைன் தங்கள் ஓய்வு விடுதியை உக்ரைன் அகதிகளுக்கு குடியிருப்புகளாக மாற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1500 சதுரடி பரப்பளவுள்ள தங்களது ஓய்வு இல்லத்தை அகதிகள் முகாமாக மாற்றியுள்ளனர். பிரைனின் தாத்தா பாட்டிக்கு உக்ரைன் தான் சொந்த ஊர் என்பதால் அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாக தங்களுடைய பேட்டியில் தெரிவித்துள்ளனர்.