அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாமோதரநகர் பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்று டீ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் பால்ராஜ் மோட்டார்சைக்கிளில் எம்.ஜி.ஆர். நகர் பேருந்து நிலையம் அருகில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது மதுரையை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக பால்ராஜ் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பால்ராஜ் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் பால்ராஜை உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்த புகாரின் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.