திடீரென 2 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு அருகே ஈருடையாம்பட்டி கிராமத்தில் தாமோதரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 2 காளை மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்த மாடுகளுக்கு தாமோதரன் தொட்டியில் தண்ணீர் வைத்துள்ளார். இந்த தண்ணீரை குடித்த 2 மாடுகளும் திடீரென துடிதுடித்து சிறிது நேரத்தில் உயிரிழந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தாமோதரன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த மாடுகளை பார்வையிட்டனர். அதன்பிறகு மாடுகள் குடித்த தண்ணீரை பரிசோதனைக்காக காவல்துறையினர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.