கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான காவலர்கள் சந்தப்பேட்டை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் சந்தப்பேட்டை பகுதியை சேர்ந்த வல்லரசு என்பது தெரியவந்தது. இவர் கஞ்சா மற்றும் மது பதுக்கி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வல்லரசுவை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.