Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! குழப்பங்கள் அதிகரிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்றையநாள் நேர்மையாக நடக்க வேண்டி நாளாக இருக்கும்.

கோபத்தால் குழப்பங்கள் அதிகரிக்கும். தேவையில்லாத குழப்பத்திற்கு இடங்கொடுக்க வேண்டாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்துக்கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உயர்பதவிகள் கிடைக்க கூடும். ஆரோக்யத்தில் கவனம் தேவை. பேசும் பொழுது கவனம் தேவை. இன்று நீங்கள் பொறுமையை கையாள வேண்டும்.

குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனைவியை அனுசரித்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். காதலில் உள்ளவர்கள் பேச்சில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்துவிட்டு மாலை நேரத்தில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள் இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |