Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (08-04-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

08-04-2022, பங்குனி 25, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி இரவு 11.05 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.

 திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 01.43 வரை பின்பு புனர்பூசம்.

 நாள் முழுவதும் சித்தயோகம்.

 நேத்திரம் – 1.

 ஜீவன் – 1/2.

 அம்மன் வழிபாடு நல்லது.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

 எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

 குளிகன் காலை 07.30 -09.00,

 சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் –  08.04.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மனைவி வழியாக நல்லது நடக்கும். வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோக ரீதியான பிரச்சினைகள் விலக மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சிக்கனமாக செயல்பட்டால் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நற்பலன்கள் உண்டா-கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள்.

துலாம்

உங்களின் ராசிக்கு உங்களுக்கு ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால் ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். சிலருக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி பெரிய தொகையை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வெளி பயணங்களில் கவனம் தேவை.

தனுசு

உங்களின் ராசிக்கு நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் மதிக்கப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் தொழிலில் அனுகூலம் கிட்டும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உத்தியோக ரீதியாக மேற்கொள்ளும் பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

மீனம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் எதிர்பாராத சுபச் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் சற்று மந்த நிலை காணப்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் கிட்டும். மன நிம்மதி ஏற்படும்.

Categories

Tech |