வாலிபரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொங்கலாபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் கலையரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் மாடசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் கலையரசனை வழிமறித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார்.
இதனையடுத்து கலையரசனின் சத்தம்கேட்டு பொதுமக்கள் அங்கு சென்றதால் கார்த்திக் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து கலையரசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.