Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஒரு லிட்டர் பாலின் விலை இவ்வளவா?…. பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை…. வெளியான தகவல்….!!!!

பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி  தர வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஒரு தனியார் விடுதியில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பாலின் கொள்முதல் விலை 30 மாதங்களாக உயர்த்தப்படாமல் இருப்பதாகவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பாதிப்படையாமல் இருப்பதற்காக வருடத்திற்கு ஒருமுறை பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு கறவை மாடுகளுக்கு வைக்கப்படும் தானிய வகைகள், கலப்புத் தீவனங்கள், பிண்ணாக்கு, தவிடு போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது.

எனவே கால்நடை கலப்பு தீவனத்தை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். அதன் பிறகு ஒரு லிட்டர் பசும் பாலின் விலையை 42 ரூபாயாகவும், ஒரு லிட்டர் எருமை பாலின் விலையை 56 ரூபாயாகவும் அரசு உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சத்துணவு திட்டத்தில் பால் பவுடர் வழங்க வேண்டும். பிரதமரின் பால் கூட்டுறவு சங்கங்களில் 100% தர பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்காக நியமிக்கப்பட்ட கூற்று தணிக்கையாளர்களை கைவிட்டு, அதற்கு பதிலாக தணிக்கைக்கு பணியாளர்களை நியமிக்க வேண்டும். மேலும் கிராம கூட்டுறவு சங்க பணியாளர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு அதை  நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது.

Categories

Tech |