நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகல் ஆர்.எஸ். பகுதியில் ராமமூர்த்தி-கீதாஞ்சலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கீதாஞ்சலி அதே பகுதியில் அமைந்துள்ள சாலையில் அமர்ந்து சமையலுக்கு தேவையான புளியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கீதாஞ்சலியின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கீதாஞ்சலி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சில வருடங்களுக்கு முன்பு கீதாஞ்சலி 5 பவுன் நகையை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.