Categories
தேசிய செய்திகள்

ஷாக் நியூஸ்…. பத்திரிகையாளர்களை அரை நிர்வாணமாக நிற்க வைத்த போலீஸ்…பெரும் பரபரப்பு…!!!!

மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்களை போலீசார், அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜனநாயகத்தின் 4 தூண்களில் ஒரு தூணாக விளங்குபவர்கள் பத்திரிக்கையாளர்கள். ஆனால் அண்மைகாலமாக பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பத்திரிக்கையாளர்கள் அதிக பேர் கொலை செய்யப்பட்ட, முதல் 10 நாடுகளில் இந்திய நாடும் அதில் ஒன்றாக உள்ளது. மேலும் கொலை செய்வது மட்டுமல்ல, மிரட்டுவது, தாக்குவது மற்றும் ஆபாசமாக திட்டுவது என பலவகையான வன்முறை சம்பவங்களும் இங்கு நடந்து கொண்டே வருகின்றன.

மேலும் பேச்சு, கருத்து, எழுத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்தாலும்,  பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறைந்தபாடில்லை. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் பத்திரிகையாளர்களை போலீசார், அரை நிர்வாணமாக நிற்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் சித்தி என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் கனிஷ்க் திவாரி. பத்திரிகையாளரான இவர் உள்பட சிலர் யூ-டியூப் சேனல் நடத்தி வருவதுடன் சில பத்திரிகைகளுக்கு ஃப்ரீலான்சிங் முறைப்படி கட்டுரையும் எழுதி வருகிறார். இந்த நிலையில், ஆளுங்கட்சி எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவுக்கு எதிராக செய்தி எழுதியதாக கனிஷ்க் திவாரி உள்பட சுமார் 8 பத்திரிகையாளர்களை விசாரணை என்ற பெயரில்அம்மாநில போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும்  அரை நிர்வாணமாக நிற்க வைத்து, அவர்களை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதையடுத்து காவல் நிலையத்தில் தங்களை அரை நிர்வாணமாக நிற்க வைத்து, அது சம்பந்தமான புகைப்படத்தை எடுத்து, எம்.எல்.ஏ.வுக்கும் மற்றும் அவரது மகனுக்கும் போலீசார் அனுப்பி வைத்ததாக கனிஷ்க் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.இந்நிலையில்   எம்எல்ஏவுக்கு எதிராக கடந்த காலங்களில் செய்தி எழுதியதாகவும் மற்றும்  காவல்நிலையத்திற்குள் போதைப்பொருள் பற்றி ஏற்கனவே செய்தி வெளியிட்டதால், காவல் நிலைய பொறுப்பாளரும் தன் மீது கோபத்தில் இருந்ததாக சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், எம்.எல்.ஏ.வுக்கு எதிராக மீண்டும் செய்தி எழுதினால், அரை நிர்வாணமாக நகர் முழுவதும் அழைத்துச் செல்வோம் என்றும் பத்திரிகையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |