வாலிபரிடம் ஏமாற்றிய பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் பிரதீப் என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர் முகநூல் மூலம் மர்ம நபர் ஒருவர் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தனது குழந்தையின் சிகிச்சைக்காக உடனடியாக பணம் அனுப்பும்படி கேட்டுள்ளார். இதனை நம்பிய பிரதீப் 1 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து பிரதீப் தனது நண்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போதுதான் பிரதீப்பிற்கு தன்னை மர்ம ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதுக்குறித்து பிரதீப் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பணத்தை மோசடி செய்தது பத்ரிநாராயணன் என்பவர் என்பது தெரியவந்துள்ளது . இதனையடுத்து காவல்துறையினர் பத்ரிநாராயனை கைது செய்து அவரிடம் இருந்து பணத்தை மீட்டு பிரதீப்பிடம் நேற்று மதியம் காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர்.