மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள பூஜாலிப்பட்டி கிராமத்தில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூப்பர்வைசரான ஜெகன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெகன்குமார் குடியாத்தம் டவுன் பகுதியில் ஒரு வீட்டில் நடைபெற்ற கட்டுமான பணியை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென ஜெகன்குமாரை மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில் படுகாயமடைந்த ஜெகன்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு ஜெகன்குமாரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.