அதிமுகவினர் ஆன்மீகவாதிகள் தமிழ்நாட்டில் நடப்பது ஆன்மீக ஆட்சி என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஆன்மீகம் பெருகினால் தான் நாட்டில் கலவரம் இல்லாமல் இருக்கும் எனக் கூறினார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆன்மீக ஆட்சி நடத்தியதாகவும், அதே போன்று தற்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆன்மீக ஆட்சி நடத்துவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.