வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென்கடுக்கை கிராமத்தில் லட்சுமணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற பட்டதாரி மகன் இருந்துள்ளார். இந்நிலையில் வினோத் பல இடங்களில் வேலை தேடி சென்றுள்ளார். ஆனால் எங்கேயும் வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத் வீட்டில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.