Categories
மாநில செய்திகள்

நூலகத்திற்கு முக்கியத்துவம்… அன்பில் மகேஷ் கொடுத்த உறுதி…!!!!!

நூலகத்திற்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக அரசு இருக்கிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஏப்ரல் 7) தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தொடர் வருகிற மே மாதம் பத்தாம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அதன்படி இரண்டாவது நாள் கூட்டத்தொடர் இன்று கூடி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது வருகை சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா  தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நூலகத்தை நவீனப்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்து பேசிய கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருகம்பாக்கம்  கிளை நூலகம் போதுமான இடவசதியுடன் சொந்த இடத்தில் இருக்கிறது. தேவைப்படும் பட்சத்தில் கருத்துரு பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும்  நூலகத்தை சுற்றியுள்ள இடங்களில் உள்ள சிதலமடைந்த பகுதிகள் இந்த ஆண்டு சீரமைக்கப்படும் நூலகத்திற்கு முக்கியத்துவம் தரும் அரசு இது என கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபின் நூலகத்துறை புத்துயிர் பெற்று இருப்பதாக வாசகர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை அண்ணா  நூற்றாண்டு நூலகம் போல் மதுரையில் கலைஞர்  நூலகம் பிரம்மாண்டமாக தயாராகி கொண்டிருக்கிறது.

மதுரை பொது நத்தம் சாலையில் பொதுப்பணித் துறையின் மூலமாக ரூபாய் 116 கோடி செலவில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நூலக கட்டிடம் தரத்துடன் சேர்ந்த ஆறாவது மாடி கட்டிடமாக 19 லட்சம் சதுரடியில் கட்டப்படுகிறது. மேலும் இந்த நூலக புத்தகங்கள் வாங்குவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

Categories

Tech |