Categories
மாநில செய்திகள்

பணியில் நீடிக்க முடியாது… ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… உயர்நீதிமன்றம் அதிரடி…!!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லாதவர்கள் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை என கூறி இருக்கிறது. மத்திய அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு கல்வி பெறும் உரிமை சட்டத்தை கொண்டு வந்திருந்தது. இந்த சட்டத்தின்படி ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என 2011 ஆம் ஆண்டில் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் 2009 ஆம் ஆண்டுக்கு முன் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறவில்லை எனக்கூறி அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வை நிறுத்தி தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பிப்பது. இதனை எதிர்த்து ஆசிரியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது 12 ஆண்டுகள் அவகாசம் வழங்கியும்  ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் ஆசிரியர் தகுதி தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அறிவித்து 12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெற உரிமை இல்லை எனக் கூறி அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டிருக்கிறார். மேலும் திறமை, அறிவு தொழில்நுட்ப அளவில் தங்களை முன்னேற்றிக் கொள்ளும் ஆசிரியரால் மட்டுமே திறமையாக பயிற்றுவிக்க முடியும் என தரமான ஆசிரியர் கல்வியை தற்போதைய அவசியம் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு கூறியுள்ளார். ஆண்டுதோறும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும் எனவும் இது சம்பந்தமான அரசின் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

Categories

Tech |