Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் படத்தில் சமந்தாவா… இது என்ன புது ட்விஸ்ட்… குழப்பத்தில் ரசிகர்கள்…!!!!!

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.

விஜயின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயின் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிகையாக நடித்து இருக்கிறார். அனிருத் இசையமைக்க பிரபல இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே  அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

ட்ரெய்லரில் வரும் பல விஷயங்களை ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகிறார்கள். டிரெய்லரில் பல விஷயங்கள் பாராட்டப் பட்டிருக்கிறது அதுல மிக முக்கியமான ஒன்றுதான் இப்படத்திற்காக மிகவும் தத்ரூபமாக மால் செட்டை போட்டுள்ளார் கலை இயக்குனர் கிரண். தற்போது ட்ரெய்லர் வெளியான பின் அவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதில் இணையதளத்தில் ஒரு தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது. என்னவென்றால் தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா பீஸ்ட் படத்தில் நடிக்க இருக்கிறார் என சிலர் பரப்பி வருகின்றனர்.

அதற்கு காரணம் சில மாதங்களுக்கு முன் சமந்தா பீஸ்ட் படத்தில் இடம்பெறும் மால் செட்டை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அப்போது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ரசிகர்கள். தற்போது ட்ரைலர்  வெளியானதற்கு பின்  சமந்தாவின் போஸ்டை தற்போது  ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதனை பார்த்த பல ரசிகர்கள் பீஸ்ட் படத்தில் சமந்தா நடித்து இருக்கின்றார் என்ற கேள்வியை கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |