வீட்டில் பற்றிய தீயில் கருகி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தெக்கூர் கிராமத்தில் காசி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் காசியின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வள்ளி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் காயமடைந்த காசியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.