Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர்…. சுமி பகுதியை விட்டு மொத்தமாக வெளியேறிய ரஷ்யப்படை….!!!

உக்ரைன் நாட்டின் சுமி பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் மொத்தமாக வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ரஷ்யா தொடர்ந்து 41-ஆம் நாளாக உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்து கொண்டிருக்கிறது. மேலும், ரஷ்ய படைகள் தலைநகர் கீவ் போன்ற முக்கிய நகர்களை கைப்பற்றுவதற்கு தீவிர முயற்சி மேற்கொண்டன. எனினும், உக்ரைன் படைகள் பலமாக தாக்குதல் நடத்தியதால் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.

இந்நிலையில், உக்ரைன் நாட்டின் சுமி பகுதியை விட்டு ரஷ்யப்படைகள் மொத்தமாக வெளியேறியதாக அப்பகுதியின் கவர்னர் தெரிவித்திருக்கிறார். அங்கு ரஷ்ய படைகள் விட்டு சென்ற வெடி பொருட்களை நீக்கும் பணிகள் நடந்து வருகிறது என்றும் மீட்பு படையினர் வெடிபொருட்களை நீக்கும் சமயத்தில் வெடிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகவு அவர் கூறியிருக்கிறார்.

மேலும், சுமி பகுதியின் ராணுவ நிர்வாக தலைவர் வெளியிட்ட அறிவிப்பில் இன்னும் பல்வேறு சுரங்கங்களும், ஆராயப்படாத பகுதிகளும் இருக்கின்றன. எனவே சாலையின் ஓரங்களில் வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டாம் எனவும், வனச் சாலைகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறியிருக்கிறார்.

Categories

Tech |