Categories
தேசிய செய்திகள்

2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு….. ஐசிஎம்ஆர் சூப்பர் குட் நியூஸ்….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் தடுப்பூசி ஒன்றே நம்மை காத்துக்கொள்ள ஒரே ஆயுதம்.எனவே அனைவரும் தவறாமல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் கோவாக்ஸின் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனாவின் வகைகளான பீட்டா, டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகியவற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியில் குறிப்பிட்ட அளவு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. ஒமைக்ரானுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த போதிலும் கடுமையான நோய் பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் இறப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்தியுள்ளது.

Categories

Tech |