காவல்துறை அதிகாரிகள் மீதான வழக்குகள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் நேற்று எழுத்து வாயிலாக பதிலளித்தார். அவர் கூறியதாவது “தேசிய குற்ற ஆவண காப்பக தகவல் அடிப்படையில் சென்ற 2017-2022ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடு முழுதும் 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது பல சட்டங்களின் கீழ் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
கடந்த 2018-2020 வரையிலான காலகட்டத்தில் காவல்துறையினரியிடையே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக தெரிவித்த நித்யானந்த் ராய், உத்தரபிரதேசத்தில் ஐபிஎஸ். அதிகாரி ஒருவர் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்டுள்ளதகவும் தெரிவித்தார்.