Categories
தேசிய செய்திகள்

“இந்தி மொழியே தேசிய மொழி”…. ஆங்கிலத்திற்கு பதிலாக ஹிந்தி பேச பழகுங்கள்…. அமித் ஷா அதிரடி….!!!

இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர் தெரிவித்துள்ளார் .டெல்லியில் பாராளுமன்ற அலுவல் மொழி கமிட்டியின் 35வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். இதில் கமிட்டியின் பதினோராவது வால்யூம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க ஒரு மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதைத்தொடர்ந்து அந்த கூட்டத்தில் பேசிய அவர் ஹிந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். நாட்டின் ஆட்சி மொழியை அலுவல் மொழி என பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |