வாலிபரிடம் பணம் பறித்த மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி பகுதியில் 24 வயதுடைய வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் வெளிநாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்காக பணம் செலுத்துமாறு கூறியுள்ளார். இதனை நம்பிய வாலிபர் 2 லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய் பணத்தை அந்த மர்ம நபரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து வாலிபர் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அந்த மர்ம நபர் வாலிபரின் தொடர்பை துண்டித்துள்ளார் . இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.