உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 43 நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. போரை கைவிட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்த நிலையில், போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்தநிலையில் உக்ரைன் -ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்த கூடிய சூரியகாந்தி எண்ணெய் உக்ரைன் நாடு அதிக அளவில் உற்பத்தி செய்து வழங்குகிறது. அந்நாட்டில் இருந்து இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகளுக்கு கப்பல் மூலம் சூரியகாந்தி எண்ணெய் வினியோகிக்கப்படுகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் சூழலால் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் போருக்கு முன்பு 100 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. நல்லெண்ணெய்,கடலை எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.