Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வாலிபர் மரணம்… “கலவரத்தில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள்”…. 40 பேர் அதிரடி கைது.!!

கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் 40 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகில் எஸ்.கே..எம் ஆயில் நிறுவனத்தில் எதிர்பாராத விதமாக லாரி மோதிய விபத்தில் வட மாநில வாலிபர் உயிரிழந்ததால் திடீர் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த கலவரத்தின்போது வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் சில போலீஸ்காரர்கள் எண்ணெய் ஆலை வளாகத்தில் உள்ள காவலாளி அறைக்கு சென்று மறைந்து இருந்தார்கள்.

ஆனாலும் வடமாநில தொழிலாளர்கள் காவலாளி அறையில் இருந்த கண்ணாடிகளை உருட்டுக் கட்டையால் உடைத்து தாக்கி கற்களை கண்ணாடியின் மேல் வீசி எறிந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஏராளமான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். உடனே போலீசாரை பார்த்ததும் கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் நாலாபுறமும் தப்பி ஓடினார்கள். உடனே காவல்துறையினர் விரைந்து சென்று தப்பி ஓட முயற்சித்த 40 பேரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளனர்.

மேலும் எஸ். கே. எம் நிறுவனத்தில் இறந்தவரின் உடலை மீட்கச் சென்ற காவல் துறையினரின் மீது கலவரம் செய்த 100-க்கும்  அதிகமானவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில் இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி மொடக்குறிச்சி காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அதன்பின் அவர் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.

Categories

Tech |