Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இலை, காய், பூ, பழம்….. முக்கனிகளில் ஒன்று…. பல வழிகளில் பலன் அளிக்கும்….!!!

வாழை மரத்தின் நன்மைகள்:

முக்கனிகளில் ஒன்றாகவே வாழைப்பழம் கருதப்படுகிறது. இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பொருட்களும் கூட வாழை  இலையில் தான் படைக்கிறோம்.

தினமும் வாழை  இலையில் உணவு உட்கொண்டு வந்தால் மேனி பளபளப்பாகும். மந்தம் ,வன்மை குறைவு, இளைப்பு , போன்றவை நீங்குவதுடன் பித்தம் தணியும்.

வாழை பூவில் வைட்டமின்”பி’ அதிகம் உள்ளது.  எனவே இதை அடிக்கடி சமைத்து உட்கொண்டால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்று வலி மற்றும் குடல் புண், ரத்த பேதி, மூல நோய்  ஆகியவை குணமாகும்.

வாழைத் தண்டு சாற்றுக்கு   சிறுநீரை பெருகக்கும்  தன்மை உண்டு. எனவே இதை நீர் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும் தேவையற்ற உடல் பருமனையும் இது குறைக்கும். வாழை தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை  நோய் குணமாகும்.  கல்லீரல்  வலுவடையும்.

வாழை பிஞ்சு மற்றும் வாழைக்காயினால், ரத்த மூலம் ரத்தக்கடுப்பு வயிற்று புண், நீரிழிவு நோயை நீக்குவதுடன்.  உமிழ்நீர் அதிகம் சுரத்தல், வயிறு உளைச்சல், உடல் வெப்பம், இருமல்  ஆகியவை தணியும்.

அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண் வருவதற்கு வாய்ப்பில்லை. உடல் தோல் பளபளப்பாகவும், பெண்களுக்கு மாதவிலக்கு சீராக வரவும் உதவும்..

வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவதால் அறிவை விருத்தி அடைய  செய்யும்.  இத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் பெரும்பாடு நோய் குணமாகும்.  வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் குணமாகும்.

Categories

Tech |