Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!!!

காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் செயலாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியை  சமீபத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது பல செயலாளர்கள் பலர் பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள இலவச திட்டங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். அவை  பொருளாதார ரீதியாக நீடிக்க முடியாத இந்தத் திட்டங்களால் இலங்கையில் ஏற்பட்டது போல் அந்தந்த மாநிலங்களில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்படக் கூடிய அபாயம் இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசின் துறை செயலாளர்களுக்கு மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜகோபால் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, செயலாளர்களின் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசால் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி தங்கள் துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |