Categories
மாநில செய்திகள்

சிவசங்கர் பாபாவுக்கு செம செக்…. கூண்டைத் திறக்காமல் திண்டாட வைக்கும் அரசு….!!!

சாமியார் என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு சென்னை கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி கொண்டு இருந்தவர் சாமியார் சிவசங்கர் பாபா. இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

தற்போது சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா ஜாமீன் பெறுவதற்கு போராடி வருகிறார். உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காமல் உச்ச நீதிமன்றம் சென்றது பாபா தரப்பு. இதற்கிடையே ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை. கடந்த அரசை விட இந்த அரசு பாபாவுக்கு செக் வைக்கிறது. அவரை வெளியே விட்டால் ஆதாரத்தை அழித்து விடுவார் எனக்கூறி கூண்டைத் திறக்காமல் அவரை திண்டாட வைத்துள்ளது.

Categories

Tech |