Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முருகன் சிலையை வைக்கனும்…. “அனுமதி கொடுங்க”…. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய மக்கள்..!!

கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் முருகன் சிலையை வைக்க அனுமதி கோரி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை  முற்றுகையிட்டனர்.

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகளிடம்  அனுமதி பெறாமல் பொதுமக்கள் முருகன் சிலையை வைக்க முயன்றுள்ளார்கள். இதை அறிந்த தலைவாசல் வருவாய் ஆய்வாளர் கனிமொழி அந்த சிலையை வாங்கி கோவிந்தம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் வைத்து பூட்டி விட்டார்.

இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முருகன் சிலையை வைக்க அனுமதி வழங்க கோரி தலைவாசல் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தலைவாசல் தாசில்தார் சுமதிக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகவலின்பேரில் அந்த இடத்திற்கு விரைந்து வந்த தாசில்தார் சுமதி, தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் அதிகாரிகள், காவல்துறையினர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை ஈடுபட்டுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது தலைவாசல் வருவாய் ஆய்வாளர் கனிமொழி, கிராம நிர்வாக அலுவலர் குமார், கால்நடைத்துறை உதவி மருத்துவர் லட்சுமணன், சக்திவேல், கோவிந்தம்பாளையம் ஊர் முக்கிய பிரமுகர் சின்னசாமி, வீரமுத்து, கலியமூர்த்தி, முருகேசன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த முருகன் சிலையை வைக்க முயன்றுள்ள இடம் மேய்ச்சலுக்கான புறம்போக்கு நிலம்.

இந்த இடம் கால்நடை துறைக்கு சொந்தமானது. எனவே முறையான அனுமதி பெற்ற பின்னரே சிலையே வைக்க அனுமதி கொடுக்கப்படும். சாமி சிலையை வைப்பதற்கு முன் வருவாய், காவல், கால்நடை துறை ஆகிய துறைகளில் அனுமதி பெற்று பிறகு தான் அந்த சிலையை வைக்க வேண்டும். அதற்கு முன் இந்த சிலையை வைக்க அனுமதி கிடையாது. முறையான அனுமதி பெற்றபின் சிலையை வைத்துக்கொள்ளுங்கள் என்று தாசில்தார் சுமதி தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே கோவிந்தம் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த முருகன் சிலை பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன. ஆனால் பொதுமக்கள் முருகன் சிலையை வைப்பதற்கு இடம் கொடுத்தால் மட்டுமே சிலையை எடுத்துச் செல்வோம் என்று கூறி அந்த சிலையை அங்கே வைத்து விட்டு சென்றுவிட்டனர். இதையடுத்து அந்த சிலையை காவல்துறையினர் இ-சேவை மையத்தில் வைத்தனர். மேலும் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |