Categories
தேசிய செய்திகள்

விஜயகாந்த் பட பாணியில்…. செல்போன் டார்ச்சில் பிரசவம்…. வைரலாகும் சம்பவம்….!!!!

ஆந்திர மாநிலத்தில் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பிரசவம் நடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜயகாந்த் படத்தில் வருவதுபோல செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தை பயன்படுத்தி ஒரு பெண்ணிற்கு பிரசவம் அரங்கேறியுள்ளது. ஆந்திர மாநிலம், நர்சிப்பட்டினம் என் டி ஆர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதே சமயத்தில் ஜெனரேட்டர் பழுது அடைந்துள்ளதால் செல்போன் டார்ச் மற்றும் மெழுகுவத்தி வெளிச்சத்தில் மருத்துவர்கள் பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில் தாயும் சேயும் நலம் என்றாலும், இங்கு கர்ப்பிணி பெண்கள் நீண்ட நாட்களாக இந்த துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Categories

Tech |