கேரளா மாநிலம் கொச்சியில் பிராந்திய சர்வதேச திரைப்பட விழாவானது (RIFFK) நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடந்த திறந்தவெளி அரங்கில் பங்கேற்ற நடிகை ரீமா கல்லிங்கல் குட்டை பாவடைஅணிந்து வந்தார். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் பல தரப்பினர் விமர்சங்களை எழுப்பி வந்தனர். இதையடுத்து விழாவில் அவர் “சினிமா துறையில் ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசினார். கேரளா போன்ற ஒருமாநிலத்தில் திரைத்துறையில் பணிபுரிபவர்களின் புகார்களுக்கு தீர்வுகாணும் அமைப்பு இல்லை என்பது நம்ப முடியாதது என அவர் தெரிவித்தார்.
ரீமா கல்லிங்கலுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் பல்வேறு மலையாள நடிகைகள் சமூகஊடக செல்வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் பிற பிரபலங்கள் நடிகைக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். தமிழில் “யுவன் யுவதி” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து, மலையாளத்தில் முன்னணி கதாநாயகியாக ரீமா கல்லிங்கல் இருக்கிறார். கேரளாவில் நடிகை மீதான பாலியல் தொல்லை சம்பவத்தை அடுத்து நடிகைகள் ரீமா கல்லிங்கல், மஞ்சுவாரியர், பூ பார்வதி, ரம்யா நம்பீஸன் ஆகிய பல நடிகைகள் இணைந்து பெண்கள் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகின்றனர்.