விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
விஜய் நடிப்பில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பீஸ்ட் திரைப்படத்தின் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் தற்போது பீஸ்ட் மோட் என்ற மூன்றாவது பாடலை படக்குழுவினர் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று மாலை 6 மணியளவில் இப்பாடல் வெளியாக உள்ளது. இந்த பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.