Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் அசம்பாவிதம்…. அம்மன் தாலி திருட்டு…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் நம்பர் 1 டோல்கேட் அருகில் விநாயகர் கோவிலில் அம்மன் பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்நிலையில் கோவிலின் அர்ச்சகர் வைத்தியநாதன் பூஜையை முடித்துவிட்டு  கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலையில் கோவிலுக்கு சென்ற பூசாரி பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கோவிலின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலி திருட்டு போனது தெரியவந்தது. உடனே வைத்தியநாதன் அருகில் உள்ள போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |