Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்…. உணவு முதல் விமான டிக்கெட் வரை…. அனைத்து சேவைகளும் ஒரே செயலியில்….!!!!

டாடா நிறுவனம் தனது டாடா நியு என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது. அந்த செயலை உணவு ஆர்டர் செய்வதில் இருந்து விமான டிக்கெட் புக் செய்வது வரை பல்வேறு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. தற்போது சோதனை அடிப்படையில் பயனர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நமது மொபைல் நம்பர் கொடுத்து ரெகிஸ்டர் செய்து விட்டு உள்ளே சென்றால் மளிகை, எலக்ட்ரானிக்ஸ், மொபைல்ஸ், அழகு சாதன பொருட்கள், ஹோட்டல்கள், விமானங்கள் மற்றும் உணவு ஆகிய அனைத்து விதமான சேவைகளும் இந்த செயலியில் வழங்கப்படுகிறது.

இதனைத் தவிர யுபிஐ சேவையையும் இந்த செயலி வழங்குகின்றது. இந்த செயலியில் வாங்கும் பொருள்கள் அல்லது புக் செய்யப்படும் சேவைகள் தள்ளுபடி விலையில் வழங்கப்பட உள்ளன. நாம் செலவு செய்யும் தொகையிலிருந்து குறைந்தது 5 சதவீத கட்டணம் நியு காயின்களாக நமக்கு கிடைக்கின்றன. இந்த காயங்கள் ஒரு வருட வேலிடிட்டியை கொண்டுள்ளன.

Categories

Tech |