Categories
மாநில செய்திகள்

தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!!

ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனாவை   கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி இயக்கம் தீவிரபடுத்தப்பட்டு வரும் நிலையில், முழுமையாக தடுப்பூசி செலுத்தி அவர்களின் முன் களப்பணியாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் முன்னெச்சரிக்கை தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த 18 வயதிற்கு மேற்பட்டோர் வருகிற 10ஆம் தேதி முதல் தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம். மேலும் அரசு சார்பில் செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி இயக்கம் வழக்கம்போல் செயல்பாட்டில் இருக்கும், எனவும் அங்கு முதல் தவணை,  இரண்டாவது தவணை மற்றும் முன்களப்பணியாளர்கள் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி வழக்கம்போல் செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |