தமிழக ரேஷன் கடைகளில் இனி பாக்கெட் அரிசி விநியோகம் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உணவுத் துறை மானிய கோரிக்கை மீது உரையாற்றிய அமைச்சர் சக்கரபாணி, தமிழக நியாயவிலை கடைகளில் இனி தானியங்கள் விற்பனை செய்யப்படும்.
நுகர்பொருள் வாணிப கழகம் 50 கோடியில் முழுமையாக கணினி மயமாக்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சிறுதானியங்கள், கேழ்வரகு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.