அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் முதலாக கறுப்பினத்தைச் சேர்ந்த பெண் நீதிபதியாக பதவி ஏற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் தடவையாக கறுப்பினத்தைச் சேர்ந்த கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்ற பெண்ணை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நீதிபதியாக நியமிப்பதற்கு அனுமதி வழங்கினார். அதன்பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் உறுப்பினர்களின் வாக்கெடுப்பிற்கு பின்பு அவர் நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டிருந்தது.
எனினும், கேடான்ஜி பிரவுன் ஜாக்சனை நீதிபதியாக நியமிப்பதற்கு ஜனநாயக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 94% இருக்கும் வெள்ளை அமெரிக்க மக்களுக்கு இடையில் 6% உள்ள கறுப்பின ஆப்பிரிக்கரை நீதிபதியாக தேர்ந்தெடுப்பதா? என்று விமர்சித்து வந்தார்கள். இந்நிலையில், செனட் வாக்கெடுப்பில் 53-47 என்ற கணக்கில் வாக்குகள் இருந்தது.
எனவே, ஜாக்சன் 53 வாக்குகளுடன் வெற்றி பெற்று அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதியாக நியமிக்கப்படவிருக்கிறார். வாக்கெடுப்பிற்கு பின் செனட் அறையில் அதிக கோஷங்களுடன் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.