Categories
மாநில செய்திகள்

கர்நாடகாவில் ஏசி வெடித்து 4 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

கர்நாடகாவில் ஏசி வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் விஜயநகர மாவட்டம் மாரியம்மனஹள்ளி கிராத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு 12.30 மணியளவில் திடீரென ஏசி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் உள்பட 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்ததால், அவர்கள் வெளியேற முடியாமல் மூச்சுத்திணறி இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும், இறந்தவர்கள் வெங்கட் பிரசாந்த், அவரது மனைவி டி.சந்திரகலா, மகன் ஆத்விக்,மகள் பிரேரனா  போன்றோர் உயிரிழந்தனர். விசாரணையில்,ஏசி வென்டில் இருந்த  வாயு கசிந்ததால் மின்கசிவு ஏற்பட்டு விபத்து நிகழ்ந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |