ஐநா மனித உரிமைகள் அமைப்பில் இருந்து ரஷ்யாவை நீக்க அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்ற நிலையில் 93 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 28 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதோடு 54 நாடுகள் வாக்களிக்கவில்லை. இந்தியாவும் ரஷ்யாவை எதிர்க்கும் தீர்மானத்தின் மீதான வரைவில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தீர்மானத்திற்கு ஆதரவாக இருந்ததால் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்கும் தீர்மானத்திற்கு ஐநா மனித உரிமைகள் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை ரஷ்யா எதிர்த்து உள்ளது. அதோடு இது சட்டவிரோதமானது எனவும் குற்றம் சாட்டியுள்ளது.