Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. குருவார வழிபாடு…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

குரு வாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குருபெயர்ச்சி, வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல்  நேற்று குருவார வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர  ஆகியோருக்கு பால், தயிர் , இளநீர், திருநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிகளை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |