விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் மூன்றாவது பாடலான ‘பீஸ்ட் மோட்’ வெளியாகி உள்ளது.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவான திரைப்படம் பீஸ்ட் . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விவேக் எழுதியுள்ள பீஸ்ட் மோட் பாடலை அனிருத் பாடியுள்ளார்.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான அரபி குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்போது பீஸ்ட் மோட் என்ற மூன்றாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஷுவலுடன் வெளியாகியுள்ள இந்தப் பாடல் மிரட்டலாக உள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.