Categories
தேசிய செய்திகள்

செல்வமகள் திட்டங்களுக்கான வட்டி அதிரடியாக குறைப்பு…. மத்திய அரசு அறிவிப்பு… அதிர்ச்சியில் மக்கள்…!!!!!!

தபால் நிலையங்கள் மூலம் நாட்டு மக்கள் அதிக பலன்களை அடையும் வகையில் மத்திய அரசு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏழை, எளிய மக்கள் மிக குறைந்த அளவிலான முதலீடுகளை செய்வதற்கும் மத்திய அரசு பல திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், இந்த திட்டங்களின் மூலம் இருமடங்கு வரையிலான லாபங்களை அடையவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. பிபிஎப், தேசிய மூத்தகுடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம், செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற அனைத்து திட்டங்களுக்கும் அரசு குறிப்பிட்ட வட்டி விகிதங்களை நிர்ணயிக்கிறது.

2022-23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜூன்30 வரையிலான காலத்தில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை நிர்ணயித்து அரசு முன்னதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த காலாண்டில் இருந்த அதே வட்டி தான் தற்போதும் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. தொழிலாளர் பிஎப் கணக்கிற்கு வழங்கப்பட்டுவந்த 8.50 சதவீத வட்டியை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு 8.10 சதவீதமாக அரசு குறைந்து அறிவிப்பை வெளியிட்டது. இதனால் பல்வேறு கோரிக்கைகள் எழுந்துவருகிறது. ஆனால் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப குறைத்ததாக அரசு தரப்பில் விளக்கம் அளி்க்கப்பட்டது.

தேசிய சேமிப்புப் பத்திரத்துக்கான வட்டி 6.8 சதவீதம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத்திட்டத்துக்கு 7.4 சதவீதம், பிபிஎப் திட்டத்துக்கு 7.1 சதவீதம், கிசான் விகாஸ் பத்திரத்துக்கு 6.9 சதவீதம் வட்டி , செல்வமகள்(சுகன்யா சம்ரிதி) சேமிப்புத்திட்டத்துக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படும். அஞ்சலகங்களில் 5 ஆண்டுக்கு வைக்கப்பட்டுள்ள டெபாசிட்களுக்கு வட்டி 6.7 சதவீதம் தொடரும், மாத வருமானத் திட்டத்துக்கு வட்டி 6.6 சதவீதமாகவும், 5 ஆண்டுக்கான வைப்பு நிதியில் வட்டி 5.8 சதவீதமும் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |