Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பெரியப்பா செய்யுற வேலையா இது…? சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சொந்த தம்பியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மருங்காபுரி தாலுகாவில் 59 வயதான விவசாயி சின்னப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய தம்பியின் மகள் அப்பகுதிலிருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு சின்னப்பன் தனது வீட்டில் நெல் மூட்டைகளை அடிக்கி வைப்பதற்காக செல்ல வேண்டும் என்று கூறி மாணவியை ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன்பின் மாணவியிடம் இதனை பெற்றோரிடம் கூறினால் கொலை செய்து விடுவதாகக் மிரட்டியுள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பள்ளியில் தடுக்கி கீழே விழுந்தார். அப்போது மாணவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருந்ததையும், கீழே விழுந்தததால் கரு கலைந்ததையும் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது சின்னப்பன் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததை மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு திருச்சி மாவட்டம் மகிளா கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட சின்னப்பனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு சார்பில் ரூபாய் 5 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |