பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி மீண்டும் தங்களது கார்களின் விலையை உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனம் என்று ஆல்டோ, எஸ் கிராஸ் நிறைய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில் மாருதி சுசுகி நிறுவனம் தங்களது வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அது மட்டுமில்லாமல் அனைத்து வகை வாகனங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும் என தெரிவித்துள்ளது.
வாகனங்களின் உள்ளீட்டு செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த விலை உயர்வை அறிவிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாருதி சுசுகி நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 8.8% வாகனங்களுக்கு விலை உயர்த்திய நிலையில் தற்போது ஏப்ரல் மாதமும் விலை உயரும் என்று அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட விலைப்பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.