உக்ரைனில் சுற்றித்திரியும் ரஷ்ய ராணுவ விரர்களை உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்கி அழித்து வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா 43 வது நாளாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், தற்போது தலைநகர் கீவ் மற்றும் பிற முக்கிய உக்ரைனிய நகரங்களில் இருந்த தனது படைகளை ரஷியா விலக்கி கிழக்கு உக்ரைனை கைப்பற்றுவதில் கவனம் செலுத்துகிறது. ரஷியாவின் இந்த நடவடிக்கையை உக்ரைன் சாதகமாக பயன்படுத்தும் நோக்கில் தங்களது பகுதியிஒ பாதுகாப்பை உக்ரைன் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தற்போது உக்ரைனில் சுற்றித்திரியும் ரஷிய ராணுவ வீரர்களை கண்டறிந்து உக்ரைனிய ராணுவம் சுட்டுத்தள்ளி வருகிறது.அந்தவகையில், உக்ரைனுக்குள் சுற்றி கொண்டிருந்த ரஷியா ராணுவ அமைப்புகளை உக்ரைனின் ஆளில்லா விமானம் தாக்கி அழித்துக் கொண்டிருக்கிறது.
இந்த தாக்குதலில் அங்கிருந்த ரஷிய ராணுவ வீரர்கள் சிலர் ஓடி ஒளிந்துகொண்ட நிலையில், ஒருவர் மட்டும் உக்ரைன் ராணுவத்தின் ஆளில்லா விமானத்திடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பிப்பதற்காக தலைதெறித்து ஓடும் காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும், உக்ரைனில் நிலைக்கொண்டு இருந்த ரஷிய ராணுவத்தை உக்ரைன் ராணுவம் தனது ஆளில்லா விமானம் மூலம் தாக்கி அழித்தது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி வைரல் ஆகிவருகிறது.