Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தொழில் நிறுவனங்களில் பெண்களுக்கான உரிய பாதுகாப்பு குழு”… கூட்டத்தில் மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி பேச்சு…!!!

மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி தொழில்நிறுவனங்கள் பெண்களுக்கான உரிய பாதுகாப்பு குழு அமைத்து நன்றாக செயல்படுத்த வேண்டும் என பேசினார்.

ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மகளிர் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு பற்றி துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் மாநில மகளிர் ஆணைய தலைவி ஏ.எஸ் குமாரி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியுள்ளதாவது, பெண்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் பல நலத்திட்டங்களை செயல்படுத்துகின்றார். பெண்களின் நலனுக்காக இலவச பஸ் கட்டணத்தை அறிவித்து அவர்களுக்கு சேமிப்பை உண்டாக்கி உள்ளார்.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல கடன் உதவிகளை வழங்கியும் பல்வேறு திறன் பயிற்சிகளை வழங்கியதன் மூலம் அவர்கள் பல்வேறு தொழில்களை செய்து வருமானத்தை ஈட்டி வளர்ச்சி அடைந்து வருகின்றனர். எங்களிடம் குழந்தை திருமணம் வரதட்சணை கொடுமை முதலியவற்றைப் பற்றிய பல்வேறு கோரிக்கைகள் மனுக்களாக அதிகம் வருகின்றது. இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகான ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட குழுக்களை கண்காணித்து வருதல் வேண்டும். இதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.

பள்ளிக்கல்வித் துறை சார்பாக பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் பள்ளிக்கல்வித் துறை, போலீஸ் துறை, உயர்கல்வித் துறை, தேசிய குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மகளிர் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகு, பொது மருத்துவத் துறை போன்ற துறைகளின் மூலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு துறைவாரியான மனுக்களை தகுந்த அலுவலர்களிடம் வழங்கி அதன் மூலம் விரைவாக தீர்வு காண நடவடிக்கைகள் செய்யப்படும். இந்தக் கூட்டத்தில் மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா நடராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கோபி ஆர்டிஓ பழனி தேவி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் பூங்கோதை மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, பொது சுகாதாரத்துறை தாய்-சேய் நல அலுவலர் கௌசல்யாதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.

Categories

Tech |